Saturday, March 27, 2010
Saturday, January 9, 2010
Nambikai
நம்பிக்கை
நம்பிக்கை இழக்காதே - தம்பி
நம்பிக்கை இழக்காதே !
நம்பிக்கை வைத்தால்தான் - தம்பி
நம் நாடே மேலோங்கும் !
அறிவின் வழியினிலே - தம்பி
ஆர்வம் செல்கையிலே
செறிவாய் ஒழுக்கமெலாம் - தம்பி
சிந்தையில் படிந்து வரும் !
பொறுமை என்பது கசப்பாகும் - தம்பி
பொறுத்துக் கனிந்தால் இனிப்பாகும்!
நிறைவு என்பது பொன்னாகும் - தம்பி
நிம்மதி வாழ்வின் கண்ணாகும் !
நம்பிக்கை இழக்காதே - தம்பி
நம்பிக்கை இழக்காதே !
நம்பிக்கை வைத்தால்தான் - தம்பி
நம் நாடே மேலோங்கும் !
அறிவின் வழியினிலே - தம்பி
ஆர்வம் செல்கையிலே
செறிவாய் ஒழுக்கமெலாம் - தம்பி
சிந்தையில் படிந்து வரும் !
பொறுமை என்பது கசப்பாகும் - தம்பி
பொறுத்துக் கனிந்தால் இனிப்பாகும்!
நிறைவு என்பது பொன்னாகும் - தம்பி
நிம்மதி வாழ்வின் கண்ணாகும் !
Friday, December 25, 2009
புத்தாண்டு -1995
புத்தாண்டு -1995
காலமகள் நிற்காமல் -
கணந்தோறும் சுழன்றாலும்
ஞாலத்தில் எல்லாரும்
நினைப்பூட்டிப் புத்தாண்டைக்
கோலமிகு விழாவெனவே
கொண்டாடி மகிழ்நிலையில்
பாலமெனப் பண்பாடும்
பயின்றுவரும் நேயமுமே
காலமெலாம் நிலைத்திருக்க
கவிபாடி வரவேற்ப்போம்
சீலமெலாம் சுழ்ந்திருக்க
செம்மாப்பாய் வரவேற்ப்போம்
நீலவான் எல்லையேலாம்
நீள் அமைதி செர்த்திடுவோம்
ஆலமர்ந்த செல்வனடி
அகலாமல் துதித்திருப்போம்!
காலமகள் நிற்காமல் -
கணந்தோறும் சுழன்றாலும்
ஞாலத்தில் எல்லாரும்
நினைப்பூட்டிப் புத்தாண்டைக்
கோலமிகு விழாவெனவே
கொண்டாடி மகிழ்நிலையில்
பாலமெனப் பண்பாடும்
பயின்றுவரும் நேயமுமே
காலமெலாம் நிலைத்திருக்க
கவிபாடி வரவேற்ப்போம்
சீலமெலாம் சுழ்ந்திருக்க
செம்மாப்பாய் வரவேற்ப்போம்
நீலவான் எல்லையேலாம்
நீள் அமைதி செர்த்திடுவோம்
ஆலமர்ந்த செல்வனடி
அகலாமல் துதித்திருப்போம்!
Saturday, August 22, 2009
Introduction
This is a informative blog regarding the Tamil literature and my creation in it.
Your Comments and suggestions are always invited
வடபழனி முருகா போற்றி
Subscribe to:
Posts (Atom)


